கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கேரளாவில் 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே நேற்று ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை பரிந்துரைத்தது.
இதையடுத்து, கேரளாவில் வருகிற 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.