ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ள சூழலில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 31ம் தேதி காலை 6 மணி வரை தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, பழங்களை விற்க அனுமதித்துள்ள தமிழக அரசு, ( அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.
ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை பொருட்கள் டோர் டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரேசன் கடைகளில் ஜூன் மாதம் முதல் 13 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டுமென்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.(