நாளை முதல் எவை இயங்கும் எவை இயங்காது?

எவையெல்லம் செய்லபடாது?

தமிழ்நாட்டில் திங்கள் முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 தளர்வில்லா முழு ஊரடங்கின்போது, மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைப் போன்று திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில்
மட்டும் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் செயல்படலாம். வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

எவற்றுக்கெல்லாம் அனுமதி?

முழு ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 முழு ஊரடங்கில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ((next)) பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ((next)) பால், குடிநீர், தினசரி பத்திரிக்கை விநியோகம் செய்ய எவ்வித தடையும் இல்லை என கூறியுள்ள தமிழக அரசு, ((next)) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின்னணு சேவைகள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. ((next)) பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் இயங்கலாம் என தெரிவித்துள்ள தமிழக அரசு, ((next)) அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் சரக்கு வாகனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. ((gfx out))

 

Exit mobile version