ஏலம் மூலமாக பெறப்படும் உள்ளாட்சிப் பதவிகள் செல்லாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விசாரணை நடத்தி உத்தரவிடப்பட்டன.

இந்நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் கடம்பூர் ராஜூ,  உள்ளாட்சிப் பதவிகள், ஏலம் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version