ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டிய 9 மாவட்டங்களுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் அக்டோபர் 15ஆம் தேதி துவங்கும் என்றும், வாக்குபதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் செப்டம்பர் 22ஆம் தேதி என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகளிலும் என, மொத்தம் 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 76 லட்சத்து 59ஆயிரத்து 720 வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.