உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமாக மனுதாக்கல் செய்து வரும் நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்புகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதற்கட்ட பயிற்சி வகுப்புகள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தில், தேர்தல் பணியாற்ற நியமிக்கபட்டுள்ள ஆயிரத்து 244 தேர்தல் அலுவலர்களுக்கு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள், முறையே டிசம்பர் 22, 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.