தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது…
தமிழ்நாட்டில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், 2 கட்டமாக வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இவற்றில், 9 மாவட்டங்களில், மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, ஆயிரத்து 381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 2 ஆயிரத்து 901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் என மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல், கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல், கட்சி அடிப்படையிலும் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post