உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமை வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக ஆயத்தமாகி உள்ளது.

Exit mobile version