ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. அதனை தொடர்ந்து 158 ஊராட்சிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் அமைச்சர்களும் தங்களது தொகுதிகளில் வாக்குகளை செலுத்தினர். காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 10 புள்ளி 41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.