உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த 2016ஆம் ஆண்டு கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், திமுகவினர் தொடுத்த வழக்கால், தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஆறு முறை நீட்டிக்கப்பட்டது. தடையை நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.

Exit mobile version