உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாகிறது

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே அறிவித்த அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் நியமனங்கள் திரும்ப பெறப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே புதிதாக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version