உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தார். தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகின்றது. ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

37,380 பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27-ஆம், தேதியும். 38, 914 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. அதன் வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் டிசம்பர் 16ம். வேட்பு மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 17ம் தேதியும் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர் 19ம் நடைபெறும்.

 

Exit mobile version