உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று மற்றும் வருகிற 30 ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. 5 மணிவரை நடைபெறும் இந்த தேர்தலில், சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

முதல்கட்ட தேர்தலில் வாக்களிப்பதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

Exit mobile version