சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவிகள்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர கடன் உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், அவசரக் கால கடனுதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு அவசர கடன் உறுதித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மேலும், தகுதியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 18ம் தேதி வரை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் மூலம் 56 ஆயிரத்து 483 கோடி ரூபாயும், தனியார் துறை வங்கிகள் மூலம் 45 ஆயிரத்து 762 கோடி ரூபாயும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version