ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக கடனுதவி வழங்கும் திட்டம்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஆயிரத்து 361 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுவனருக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக 20 ஆயிரத்து 186 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆயிரத்து 83 கோடி ரூபாயும், ஊராட்சி அளவிலான 317 கூட்டமைப்புகளுக்கு 277 கோடி ரூபாயும் கடனுதவியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், ஊராட்சி கூட்டமைப்புகளுக்கும் கடனுதவிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version