சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற எல்.கே.சுதிஷ்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேமுதிக துணைச் செயலாளரும், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளருமான எல்.கே.சுதிஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சுதீஷ் சந்தித்து பேசினார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை 40 தொகுதிகளிலும் வெற்றியை தேடி தரக்கூடியது எனவும், வெற்றிப் பெறும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரும் நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்காக குரல் கொடுப்பார்கள் என்றும் சுதீஷ் கூறினார். விரைவில் துவங்கவுள்ள தேமுதிக பிரசாரத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருவார் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version