பிரித்தானியா நாட்டில், Liverpool என்கிற இடத்தில் சேர்ந்த சிறுமி ஒருவர் அங்கிருக்கும் L6 Community Centre என்ற இடத்திற்கு சென்றுள்ளார். டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் கொண்டாட கிறிஸ்துமஸ் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், குழந்தைகள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறலாம் மற்றும் சாண்டா தாத்தாவிடம் என்ன கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையும் கேட்கலாம் என்று இருந்தது.
கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா தாத்தா தான் நம் நினைவுக்கு வரும். அது குழந்தைகளை கவரும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த அந்த சிறுமி “அன்புள்ள சாண்டா உங்களால் உதவ முடியுமா…? கிறிஸ்துமஸிற்கு எங்களுக்கு வீடு கிடைக்குமா…? சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுக்க முடியுமா…? கிறிஸ்துமஸ்க்கு எனக்கு அழகான பொம்பை போதும்” என்று கடிதத்தில் எழுதியுள்ளார். இதை பார்த்த அப்பகுதியின் தொழிலாளர் கட்சியின் உள்ளூர் தலைவர் Gerard Woodhouse தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறார், அவரின் குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிய வைத்திருக்கிறார், இதைக் கண்டவுடன் வேதனையடைந்தேன். மேலும் அவர் குறித்த சிறுமியை பற்றிய விவரங்களை தேடி வருவதாகவும், அதன் பின் அவர் மற்றும் குடும்பத்தினரை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹோட்டல் ஒன்றில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.