தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி, காப்பாற்ற முயன்ற இருவரும் மாயம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்று தண்ணீரில் அடித்துச் சென்றவர்களை இரண்டாம் நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

பல்லடம் அருகே புள்ளியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த அன்னபூரணி இவரது மகள்கள் சரண்யா (12) தேவி (19),தேவியின் கணவர் சேதுபதி (24) அனைவரும் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளனர். அன்னபூரணி கரையில் இருந்த நிலையில் சரண்யா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

அவரைக் காப்பாற்ற சென்ற தேவி, சேதுபதியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் சென்ற காமநாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு வீரர்கள் மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனை அடுத்து இரண்டாம் நாளாக இன்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version