அமமுக சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அமமுக சார்பில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலும், காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும், 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திருச்சியில் சாருபாலா தொண்டைமானும், நெல்லையில் ஞான அருள்மணியும், மதுரையில் டேவிட் அண்ணாதுரையும் , கோவையில் அப்பாத்துரையும், நாகப்பட்டினத்தில் செங்கோடியும் போட்டியிடுவார்கள் என்று வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் தோகுதி இடைத்தேர்தலில் பாலசுப்பிரமணியும், அரூரில் முருகனும், மானாமதுரையில் மாரியப்பன் கென்னடியும், சாத்தூரில் சுப்பிரமணியனும் போட்டியிடுவார்கள் என்று அம்முக தெரிவித்துள்ளது.

Exit mobile version