மதுரை 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதிவாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 472 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் நடராஜன் வெளியிட்டார். மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 25 லட்சத்து 66 ஆயிரத்து 319 ஆக இருப்பதாக அவர் கூறினார்.

Exit mobile version