திருச்சி இறுதி வாக்காளர்கள் பட்டியல்

தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 472 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆக உள்ளது.

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள ஆண் வாக்காளர் 10 லட்சத்து 84 ஆயிரத்து 110 ஆகவும், 11 லட்சத்து 37 ஆயிரத்து 378 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 186 வாக்காளர்களும் உள்ளனர்.

Exit mobile version