சென்னையில் 4,648 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்திருப்பதாக, சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது… என்ன இருக்கிறது அந்த பட்டியலில், விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு …
சென்னை மாநகரம் என்பது பல்வேறு தரப்பு மக்களை கொண்ட மிகப்பெரிய நகரம். இங்கு ரவுடிகளுக்கு பஞ்சமில்லை… அவர்களை அடக்க அதிமுக ஆட்சி தனிபாணியை வகுத்து, ரவுடிகளின் ஆட்டத்தை என்கவுண்டர் மூலம் முடிவுக்கு கொண்டு வருகிறது…
1975- ம் ஆண்டிற்கு பிறகு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் என்கவுண்டர் மூலம் நக்சல்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2002ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் 11 ரவுடிகளை போலீஸார் சுட்டு வீழ்த்தி, பொதுமக்களின் அச்சத்தை போக்கினார்…
தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தொடர்ந்து ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தும், தேவைப்பட்டால் என்கவுண்டர் மற்றும் கைது நடவடிக்கைகள் செய்தும் மக்கள் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்து வருகிறது.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளை நான்கு விதமாக பிரித்துள்ளனர்…
முதலில் A+ ரவுடிகள்.……. இவர்கள் தான் ரவுடி கூட்டத்தின் தலைவர்கள்… நேரடியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து வேலையை முடிப்பவர்கள்…
இரண்டாவதாக A பிரிவு…… இவர்கள் நேரடியாக கொலைகளை செய்பவர்கள்…
மூன்றாவது B பிரிவு.…….. இவர்கள் ரவுடி கூட்டத்திற்கு உதவியாக இருப்பவர்கள்.
நான்காவது C- பிரிவு……… இவர்கள் அன்றாட செலவுக்கான பணத்திற்கு குற்றச் செயலில் ஈடுபட்டு வருபவர்கள்…
சென்னையில் – 4,648 ரவுகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் A+ பிரிவில்- 79 பேரும், A பிரிவில் – 265 பேரும், B பிரிவில் – 2000 பேரும், C பிரிவில் – 2303 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்துறையினர் ரவுடிகளின் பட்டியலை தயார் செய்துள்ளதை அறிந்த ரவுடிகள் கதிகலங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது… அதிமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளது ஒர்புறம் என்றால், மக்களை அச்சுறுத்தி வரும் ரவுடிகளை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்க காவல்துறை பிள்ளையார் சுழி போட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது…