ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!

2 வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் 426 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருவதால், 2 வாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி, மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று, அதிக எண்ணிக்கையிலான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 426 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 100 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தில் 82 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 79 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவையில் 76 கோடியே 12 லட்சம் ரூபாய்கும் மது விற்பனையாகியுள்ளது.

Exit mobile version