சிங்கத்தின் முன்பு நேருக்கு நேர் டான்ஸ் ஆடிய பெண்!

‘பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில்’ பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருக்கும் இடத்துக்குள் டான்ஸ் ஆடிய பெண்ணை போலீசார் கைது செய்து எச்சரித்தனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ‘பிரான்க்ஸ் உயிரியல் பூங்கா’ உள்ளது. இந்த பூங்காவுக்கு வந்த இளம்பெண் ஒருவர் தீடீரென பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருக்கும் இடத்துக்குள் நுழைந்துவிட்டார்.

அப்போது, அங்கிருந்த ஆண் சிங்கம் ஒன்று அந்த பெண்ணை நோக்கி நடந்து வந்தது. ஆனால், அந்த பெண்ணுக்கு சிறிதளவும் பயம் கூட இல்லாமல் சிங்கத்தை நோக்கி கையசைத்து, டான்ஸ் ஆடியுள்ளார்.

அதை பார்த்த சிங்கம் இவரை எதுவும் செய்யாமல் அந்த பெண் செய்யும் விதத்தை வேடிக்கை பார்த்து கொண்டு அதை ரசித்தது.

இந்நிலையில்,அபாயத்தை உணராமல் அந்த பெண் சிங்கம் இருந்த பகுதிக்கு அத்து மீறி நுழைந்ததால் அந்த பெண்ணை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பியுள்ளார்கள்.

Exit mobile version