பொங்கலுக்கு வீடுகளில் வெள்ளையடிக்க பயன்படும் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தீவிரம்

பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புற வீடுகளில் வெள்ளை அடிப்பது வழக்கம். இதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பாரம்பரியமாக கிராமப்புறங்களில் மக்கள் தங்களது வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வெள்ளை அடிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பயன்படும் சுண்ணாம்பு கற்கள் விவசாயத்திற்கு உரமாகவும் பயன்படுத்தப் படுகிறது.

ஆனால் பொள்ளாச்சியில் சுண்ணாம்பு கற்களை உற்பத்தி செய்யும் சூளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இந்த நவீன யுகத்தில் சுண்ணாம்பிற்கு பதிலாக வெள்ளை சிமெண்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சுண்ணாம்பு கற்களை தயாரிக்கும் கூலியாட்களும் குறைந்து வருவதால், இந்த உற்பத்தி குறைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version