வேதாரண்யத்தில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்

நாகை மாவட்டம் வேதரண்யத்தில் மின்னல் தாக்கியதில் படுகாயம் அடந்த 2 பேரும், லேசான காயங்களுடன் 12 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன் புலத்தில் அதிகாலையில் மழை பெய்த போது மின்னல் தாக்கியது. இதில் கூறை வீட்டில் உறங்கி கொண்டிருந்த வீரமணி மற்றும் சந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் அடுத்த வீடுகளில் இருந்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட 14 பேருக்கும் வேதாணியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேதம் குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version