சீனாவின் இலையுதிர்கால திருநாளையொட்டி விளக்கேற்றி கொண்டாட்டம்

சீனாவின் இலையுதிர்கால நாளை வரவேற்கும் விதமாக, நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்த மசோதவிற்கு எதிராக போராடிய ஹாங்காங் போராட்டக்காரர்கள் மலைகளில் போராட்டம் சார்ந்த வாசகத்துடன் விளக்குகளை ஏற்றி கொண்டாடினர். நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவை அந்நாட்டு தலைவர் கேரி லேம் திரும்ப பெற்றுள்ளார். இருப்பினும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சுமார் 1,400 பேருக்கு பொது மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Exit mobile version