தமிழகத்தில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தெற்கு வங்க கடல் பகுதிக்கு, அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version