அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை குறைந்ததால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version