சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்த லேசான மழையால்,வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் ஒருசில இடங்களில் இன்று சாரல் மழை பெய்தது.

கோயம்பேடு, அமைந்தகரை, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

Exit mobile version