வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை : தமிழகத்தில் பரவலாக மழை

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்ககடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் 25ம் தேதிவரை தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி காட்டுமன்னார்கோயில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version