தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 5.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.