கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பைத் தவிர்க்கும் வகையில் மதுரை அண்ணாநகர் அரசு கொரோனா மருத்துவமனையில் தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 242 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்பட 848 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன.
கொரோனா நோயாளிகளுக்காக ஜீரோ டிலே என்ற சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டது முதல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் வரை ஒவ்வொரு நிலையிலும், அவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது.
உயிரிழப்பைத் தவிர்க்கும் வகையில் கழிவறையிலும் கூட ஆக்ஸிஜன் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தங்குதடையின்றி ஆக்ஸிஜனை அளிப்பதற்காக, ஆக்ஸிஜன் கொள்கலன்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டு, கசிவுகள் ஏற்படாத வகையில் அவை தொழில்நுட்ப வல்லுநர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளன.