ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி உள்ளது. இதனால், பள்ளிகள் நாளை முதல் செயல்படும் எனத் தெரிய வந்துள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவை ரத்து போன்ற கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. எனவே, பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு, போக்குவரத்தும் சீரடைந்துள்ளது. சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும், அங்கும் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது…