ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்திய எல்ஜி நிறுவனம்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறியதாக எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையுடன், ஸ்மார்ட் போன் விற்பனையையும் செய்து வந்தது. அந்நிறுவனம், புதிது புதிதாக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வந்த நிலையில், தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் சந்தையில் தற்போது இருக்கும் கடும் போட்டி காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 31-ஆம் தேதியுடன், ஸ்மார்ட்போன் விற்பனையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துள்ள எல்.ஜி. நிறுவனம், இதன் மூலம், பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version