மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், கஜேந்திர சிங்-க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என்றும், தமிழக அரசின் அனுமதியை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சக மதிப்பீட்டுக் குழு 19 ந்தேதி பரிசீலிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.