மதிமுக தங்கள் கூட்டணியில் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருப்பதன் மூலம் திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுவது அம்பலமாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த துரைமுருகன், கொள்கையுடன் ஒத்துபோவது வேறு, கூட்டணி வேறு என்று கூறியதுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் தங்கள் கூட்டணியில் இல்லை என வெளிப்படையாக பேசினார். இதனால் தேர்தலின்போது சீட்டு கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் உரைந்துபோயுள்ளனர். குறிப்பாக மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என முழங்கிக்கொண்டிருந்த வைகோ பேரதிர்ச்சியில் உள்ளார். இந்தநிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கூட்டணி குறித்து திமுக தலைவர் தனது முடிவை சொல்லட்டும் எனக் கூறி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.