பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் : பிரதமர் மோடி

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்துக்கான மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அக்டோபர் 2ந்தேதி மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் மக்கள் பேசி வருவதாக கூறியுள்ளார். சேவை உணர்வானது மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது என்றும், அவரது 150வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க பெரிய இயக்கத்தையும் தொடங்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தி உள்ளார். காந்தி ஜெயந்தியை இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version