சிபிஐ தங்கள் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மமதா பானர்ஜியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், மேற்கு வங்க பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் செயல்பட்டனர் என்று உடனடியாக முடிவுக்கு வந்து விடுவது தவறு என குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டதாக விளக்கமளித்த அவர், காவல்துறை ஆணையருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டதாகவும் , ஆனால், அவர் ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார். எனவே, சி.பி.ஐ. தங்கள் கடமையை செய்ய விடுங்கள் என்று மமதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.