கொரோனா தடுப்பூசி மீதான தயக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேசிய அவர், டோக்கியோ ஒலும்பிக் போட்டியில் பங்கேற்க செல்லும் வீரர்களை Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஒவ்வொருவரும் ஊக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை குறிப்பிட்டு பேசிய பிரதமர், திறமை, அர்ப்பணிப்பு, மனவுறுதி மற்றும் போட்டி நேர்மைப் பண்பு எல்லாம் ஒருசேர இணையும் போது, சாம்பியன் உருவாகிறார் எனக் குறிப்பிட்டார்.
உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி தான் என்றும் தமிழ் மொழி மீதான தனது அன்பு என்றுமே குறையாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கொரானா அச்சுறுத்தல் தொடர்வதால் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர், தானும் தனது 100 வயதுடைய தாயும் 2 டோஸ்களை செலுத்தி கொண்டதாக கூறினார்.
அதனால், கொரோனா தடுப்பூசி மீதான தயக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.