எல்.இ.டி. விளக்குகளால் தமிழக அரசுக்கு ரூ.286 கோடி செலவு மிச்சம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எல்.இ.டி. விளக்குகளால் 286 கோடி ரூபாய் மிச்சமாகியிருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டபேரவை இன்று கூடியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து பேசினர். அப்போது பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறினார். இதனால் அரசுக்கு 286 கோடி ரூபாய் வரை மின்சார செலவு மிச்சமாகியிருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

இதேபோல் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மதுரையை பெருமைப்படுத்தும் விதமாக அங்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

Exit mobile version