10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாடம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கிராமப்பகுதியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாடம் நடத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வில்பட்டி கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 46 பேரை வாட்ஸ் அப்பில் குழுக்களாக அமைத்து, பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்கள் வாட்ஸ் அப்பில் பதிலளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பயின்று வருகின்றனர். இதனால், தங்களது கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த மாணவர்கள், இதற்கு உறுதுணையாக உள்ள தமிழக அரசுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Exit mobile version