மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. கர்நாடக அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு 2 ஆயிரத்து 529 கனஅடிவீதம் நீர்வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நீர்வரத்து 2 ஆயிரத்து 228 கனஅடியாக குறைந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 புள்ளி 69 அடியாக உள்ளது. நீர்இருப்பு 68 புள்ளி 37 அடியாக உள்ளது.

டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடிவீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Exit mobile version