தென்காசியில் 18 வயது நிரம்பிய கோவில் யானை உடல்நிலை குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சொந்தமான 18 வயது நிரம்பிய வள்ளி எனும் பெண் யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. 2006 ஆம் ஆண்டு கடம்பூர் ஜமீன்தார் இரண்டு யானைகளை கோயிலுக்கு அன்பளிப்பாக அளித்தார். அன்று முதல் வள்ளி, தெய்வானை என்ற பெயருடன் இந்த யானைகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் 2008ம் ஆண்டு தெய்வானை யானை உடல் நிலை குறைவால் உயிரிழந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவுடன் இருந்த வள்ளி யானை கோவிலை சுற்றி வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. இதனையடுத்து யானைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.