பற்றி எரியும் அமேசான் காட்டை பாதுகாக்க ரூ.35 கோடி நிதி வழங்கிய லியார்டினோ டிகாப்ரியோ

கடந்த மூன்று வாரங்களாக பற்றி எரியும் பிரேசிலின் அமேசான் காடுகள் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த இயற்கை பேரழிவை அனைவரிடத்திலும் இயற்கை குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

உலகின் ஆக்ஸிஜன் தேவைக்கான 20% அமேசான் காடுகளில் இருந்து உற்பத்தியாகிறது என்பதால் இந்த தீ விபத்து உலக அளவில் கவனிக்கப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் #Prayforamazon என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகின.

இந்நிலையில் டைட்டானிக் படத்தின் ஹீரோவும், பிரபல ஹாலிவுட் நடிகருமான லியார்டினோ டிகாப்ரியோ அமேசான் காட்டை பாதுகாப்பதற்காக தன் நண்பர்களுடன் இணைந்து சுமார் ரூ.35 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரணமாகவே இயற்கையை நேசிக்கும் லியார்டினோ டிகாப்ரியோ, கடந்த மே மாதத்தில் சென்னையில் நிலவிய குடிநீர் பிரச்சனையை குறிப்பிட்டு, “மழைதான் சென்னையை காப்பாற்ற வேண்டும்” என பதிவிட்டிருந்தார். இதற்கிடையில் அமேசானை பாதுகாக்க ரூ.35 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளது அனைவரின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version