அரசு சார்பில் முதல் முறையாக பயறு வகைகள் கொள்முதல் மையம் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், வெளிச் சந்தையில் வியாபாரிகள் கொள்முதல் விலையை உயர்த்தியுள்னர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய அரசின் விலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 2018-19ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதரவு விலையில் உளுந்து, பச்சைப்பயறு மற்றும் துவரை போன்ற பயறுவகைகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில் அரசு கொள்முதல் மையம் செயல்பாட்டிற்கு வருவதை அறிந்த வியாபாரிகள், வெளிச் சந்தையிலும் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளனர். அதன்படி, உளுந்து கிலோ 53 ரூபாய், துவரை கிலோ 58 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதேபோல் பிற பயிர்களுக்கும் கொள்முதல் மையங்கள் தொடங்கி, விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுக்கிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.