Lenovo நிறுவனம் முதன் முறையாக 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிவித்திருந்தது.
100 மெகாபிக்சல்களை உடைய கேமராவினை கொண்ட கைப்பேசி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
Lenovo Z6 Pro எனும் ஸ்மார்ட் கைப்பேசியே 100 மெகாபிக்சல்களை கொண்ட கமெராவுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த தகவலை Lenovo நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.