சட்டப்பேரவையில் இன்று : உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 19 புதிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் காமராஜ் வெளியிட்டார். முதியோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் அன்னப்பூர்ணா திட்ட பயனாளிகளிகளுக்கு 48 கோடியே 51 லட்ச ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 465 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 60 சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் சரக்குகளை பாதுகாத்திட 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்படும் என்றும் டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கீரிட் தளத்துடன் கூடிய 25 நேரடி நெல் கொள்முதல் நிலைய சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என்றம் அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்.

டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்கு 13 கோடி மதிப்பீட்டில் 100 எண்ணிக்கையிலான நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version