2020 ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், ஜனவரி 6ம் தேதி கூடவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டபேரவை ஜனவரி 6ம் தேதி கூடும் என பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டபேரவை கூட்டம் துவங்குகிறது.
கூட்டம் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது குறித்து 6ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், ஜனவரி 7ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் சட்டபேரவை கூட்டம், அதிகபட்சமாக 5 நாட்கள் நடைபெறக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.