நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்த சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடர் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்றும், வேலை வாய்ப்பின்மையைக் குறைக்க திறன் மேம்பாட்டு பயிற்சியை நாடு முழுவதும் மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்த சட்ட மசோதா கொண்டு வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.